யாழ்பல்கலைக்கழக 40 ஆவது ஆண்டு நிறைவில் சிறந்த ஆய்வுகூட விரிவுரையாளராக சிவானந்தம்!

யாழ்.பல்கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் விரிவுரையாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மருத்துவ பீடத்துக்கு ஆற்றிய சேவையை விதந்து கௌரவிக்கப்பட்ட விழாவில் யாழ். பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் மருத்த்துவ பீட மாணவர்களுக்கு ஆய்வுகூட தொழில்நுட்பம் தொடர்பாக விரிவுரையாற்றிய தெல்லியூர் கதிரவேல்பிள்ளை சிவானந்தம் கௌரவிக்கப்பட்டார். இவருக்குரிய கௌரவத்தை யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி ந.இரவிராஜ் வழங்கினார்.

தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட க.சிவானந்தம், தெல்லிப்பழை பிரபல பல்வைத்திய நிபுணர் காலஞ்சென்ற வ.கதிரவேல்பிள்ளை மாமாங்கம் தம்பதிகளின் புதல்வராவார். இவர் பன்னாலையில் துர்க்கா ஆய்வுகூட சேவையின் நிர்வாக இயக்குநரும் ஆவார்.

2013 ஆம் ஆண்டு  நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் உள்ள  ஞானம்ஸ் உணவகத்தில் நடைபெற்றது. இதில்  பெறுமதிமிக்க சேவையை மண்ணுக்கு ஆற்றிய ஐந்து தொழில்நுட்பவியலாளர்களை அந்த அமைப்பு கௌரவித்தது. அதில் ஆய்வுகூட மருத்துவ தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவையில் பொன்விழாவைக் கண்ட தெல்லியூர் க.சிவானந்தத்துக்கு சிறப்புக் கௌரவம் கிடைக்கப்பெற்றது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ லங்கா நோயியல் வைத்திய கல்லூரி கொழும்பு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் நடத்திய அகில இலங்கை பல்கலைக்கழகத்தில் அதிசிறந்த சேவையாற்றிய 10 தொழில்நுட்பவியலாளர்களில் ஒரே ஒரு தமிழ் உத்தியோகத்தரும் அகில இலங்கை சுகாதாரத் திணைக்களத்தில் 7 வைத்திய ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களில் 4 தமிழ் உத்தியோகத்தர்களில் வடமாகாணத்தில் இருந்து அழைக்கப்பட்ட ஒரேயொரு தமிழ் உத்தியாகத்தராக க.சிவானந்தம் கௌரவம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்