பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் துப்பாக்கிச் சூடு – மொட்டு கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸ கைது!

கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினரை புதுக்கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்