அமெரிக்கா போன்று கனடாவும் விண்வெளிப் படைப் பிரிவை அமைக்க வேண்டும் – இராணுவ நிபுணர்கள் பரிந்துரை!

அமெரிக்கா போன்று கனடாவும் தனக்கென்று சொந்தமான விண்வெளிப் படைப் பிரிவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கான விண்வெளிப் படையணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் மேற்கொண்டுள்ள நிலையில் கனடாவின் இராணுவ நிபுணர்கள் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி அந்த நடவடிக்கையையும் அவர்கள் பாராட்டியுள்ளதுடன், கனடாவும் அவ்வாறு தனது சொந்த வின்வெளிப் படையணியை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கனேடிய பாதுகாப்பு சிந்தனையாளர் வடடத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கனடாவும் தனது சொந்த விண்வெளிப் படையணியை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் நிச்சயம் சிந்திக்கவேண்டிவரும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நமக்கென்று தனியானதொரு விண்வெளிப் படையணியை உருவாக்குவதும், அதற்கான நிபுணர்களையும், உபகரணங்களையும் தயார்படுத்திக் கொள்வதும் வரவேற்கப்படவேண்டிய ஒரு திட்டமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த திட்டத்தை உடனடியாக செயற்படுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், கனடா முதலில் விண்வெளி திடடங்களில் திறமைவாய்ந்த நிபுணர்கள் அணியையும், அதற்கான அபிவிருத்தி நிலையத்தினையும் ஏற்படத்த வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்