ஐஸ்பீல்ட் பார்க்வே வீதி மற்றும் நெடுஞ்சாலை 93 வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!

ஐஸ்பீல்ட் பார்க்வே வீதி மற்றும் நெடுஞ்சாலை 93 கடந்த நாட்களாக நிலவி வந்த அதிகளவிலான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவினை அடுத்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டா பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகளவிலான பனிப்பொழிவு எச்சரிக்கையை சுற்றுசூழல் கனடா விடுத்திருந்தது.

குறிப்பாக பனிப்பொழிவு 60 முதல் 80 சென்டிமீட்டர் அளவில் வீதிகளில் படிந்திருந்தது. இந்நிலையில் குறித்த வீதிகளை கடந்த 4 ஆம் திகதி முதல் பயன்படுத்துவதை பயணிகள் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் ஐஸ்பீல்ட் பார்க்வே வீதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்