மாகாண ஆளுநர் பதவிக்கு சிவில் செயற்பாட்டாளர்?

மாகாண ஆளுநர்கள் நியமனத்தில் சிவில் செயற்பாட்டாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுத்துவந்த மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்ட சிரத்தையுடன் செயற்பட்ட ஒருவருக்கு இப்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்