அல்பர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் காலமானார்!

அல்பர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜீன் வோஸ்ஸெடிஸ்கி தனது 71 ஆவது வயதில் காலமானர்.

புற்றுநோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி அவரது கட்சி உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Not quiet done yet. The Speaker of the Alberta Legislative Assembly Gene Zwozdesky welcomes 70 rookie MLAs to an orientation session at the Alberta Legislature, in Edmonton, Alta. on Tuesday May 12, 2015. David Bloom/Edmonton Sun/Postmedia Network

அல்பர்ட்டா லிபரல் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை 1993–1998 தொடங்கிய அவர், 1997 ஆம் ஆண்டு பொது தேர்தலில் எட்மட்டன்-மில் கிரீக் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதன் பின்னர் தொடர்ந்து 2001, 2004, 2008, 2012 இல் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். அத்தோடு அடுத்து இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது பெரும்பான்மையை பெற்றார்.

அதன்படி இவர் கடந்த 2012 முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அல்பர்ட்டா சட்டமன்றத்தின் 12 ஆவது சபாநாயகராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்