பனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது குளிர்காலநிலை நிலவி வருகின்றது இந்த காலநிலை பனி மீன்பிடி பருவத்தின் தொடக்கமாகும். இருப்பினும் காலநிலை மாற்றத்தால் பனி மீன்பிடி பாதுகாப்பானது அல்ல என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ரிவர் பகுதிக்கான வெப்பநிலைகள் பூஜ்ஜியத்திற்கு கீழே வீழ்ச்சியடைந்து, சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உறைபனிக்கு உயரும் என்பதால் வானிலையை கணிக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்தும் பனி பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி என்பன சுழற்சியில் தொடர்ந்தும் பதிவாகும் என்றும் இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு வெப்பநிலை -12C ஆக இருந்ததுடன் மிதமான பனிப்பொழிவு ஏற்பட்டது.

இருப்பினும் திங்கட்கிழமை இந்த வானிலை மாற்றமடைந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலை உயரும் என்றும் தெரிவித்த சுற்றுசூழல் கனடா குறிப்பாக செவ்வாய்க்கிழமை 4C ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்தோடு வார இறுதிக்குள், மீண்டும் மீண்டும், காலநிலை குளிர்ச்சியாக மாறும். இதன் காரணமாக பால்ட் லேக், பைன்ஹர்ஸ்ட் ஏரி மற்றும் ஷேட்டின் மில்ஸ் கன்சர்வேஷன் ஆகிய பகுதிகளில் பனி மிகவும் நிலையானதாக இருக்கும் என்றும் இதன் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கிராண்ட் ரிவர் கன்சர்வேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்