லசித் மற்றும் திசர எடுத்த அதிரடி தீர்மானம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உறுதியளிப்பதாக இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவினது என கருதப்படும் பேஸ்புக் கணக்கின் ஊடாக அணியின் வீரரொருவர் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விளையாட்டுத் துறை அமைச்சரிடம் சென்றதாக கடந்த தினம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்போது , எவரது பெயரும ்குறிப்பிடப்படாத நிலையில் , பெண்டா கரடியொன்றின் புகைப்படம் லசித் மாலிங்கவின் மனைவியால் பதிவேற்றப்பட்டிருந்தாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

எனினும் , அடுத்த நாளே திசர பெரேராவின் மனைவியினது என கூறப்படும் பேஸ்புக் கணக்கில் இருந்து அதற்கு பதிலளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் , இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக , திசர பெரேரா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள எவரின் பின்னாலும் செல்ல வேண்டிய தேவை எனக்கில்லை என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்