ரொறன்ரோ பெரும்பாக்கத்தில் இரு வேறு காலநிலை : வானிலை எச்சரிக்கை!

ரொறன்ரோ பெரும்பாக்கத்தில்நேற்று (திங்கட்கிழமை) முதல் இருவேறு காலநிலை தொடர்ந்தும் நிலவும் என கனடிய சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் குறைந்தளவு பனி, உறைபனி மற்றும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என ஒரு சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் 2 சென்ரிமீற்றர் அளவில் பனிப்பொழிவு காணப்படலாம் எனவும் இதனால் வாகனச்சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதி உயர் வெப்பநிலை -2 C ஆகவும், குறைந்த வெப்பநிலை – 17 வரையும் இருக்கும் என அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்