வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடன் கனடா பேச்சு

கனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வொஷிங்டனின் வரி விதிப்பு தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும், இதன்போது வரி விதிப்புகளை தளர்த்துவது குறித்து பேசப்படவில்லை என கனேடிய வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேடிய பிரதமருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசி மூலம் இந்த உரையாடல் இடம்பெற்றிருந்தது.

உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வரி விதிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பேச்சுவார்த்தையின் முழு விபரம் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, இருதரப்பு வர்த்தக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதுவும் விவரிக்கப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்