தமிழ் சி என் என் கிழக்கு அலுவலகம் திறந்து இன்றுடன் 02 வருடம் பூர்த்தி – சிறப்பு கவிதை

பாலோடு தேன் சுவையும்
பச்சைவயல் மனங்கவரும்க
கிழக்கிழங்கை மண்ணதிலும்
உதித்தெழுந்த தமிழ் சி என் என்னே…

முத்தமிழ்வாழ் விபுலானந்தர்
பிறந்த மண்ணாம் காரைதீவில்
நிலை கொண்டு பணி நகர்த்தும்
எம் ஊடகமே
தமிழ் சி என் என்னே …

இரண்டு ஆண்டுகள் உன் பணியை
வரிகளுக்குள்
சிறையிட முடியாதுதான்.
உன் பணிகள் தொடர வேண்டும்
பல நண்மைகள் நிறைய வேண்டும்.

தொடர்ந்திடும் உன் பணிகள் தோல்விகள் காணாது
எதிர்ப்புக்கள் வந்தாலும்
உன் பயணங்கள் ஓயாது…

வெற்றித் திருமகள் பற்றியே பிடிப்பாள்
தமிழரின் குரலே நாளை உரைப்பாள்
அகலமாய் விரியட்டும் உன் இறக்கைகள்
புதிய சரித்திரம் தினமும் படைத்திடவே……………………………………….

காரையன் (கதன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்