ரொறன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கச் சூடு – இரண்டு பேர் படுகாயம்!

ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குயின் ஸ்ட்ரீட் மேற்கு மற்றும் வூட்வின் அவென்யூ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பொலிஸார் அங்கு சென்ற போது அங்கே இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் சுயநினைவுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆண்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிடுகையில், வாகனம் ஒன்றினுள் இருந்த இருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், காயங்களுடன் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளதாகவும் சாட்சியங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 3 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்