பதவி ஆசை எனக்கில்லை! – ஒரே வார்த்தையில் முடித்தார் சம்பந்தன்

“நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்லன்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார் எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார். சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே சபாநாயகரின் இந்தத் தீர்மானத்தை அவைக்கு அறிவித்திருந்தார் பிரதி சபாநாயகர்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது மஹிந்த ராஜபக்ஷவா என்று நிலவிய சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இது தொடர்பில் தங்கள் கருத்து என்னவென்று இரா.சம்பந்தனிடம் வினவியபோதே ஒரே வார்த்தையில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்