மன்னார் கடலில் இன்று அதிகாலை இருளில் நடந்த சம்பவம்!

மன்னார் வங்காலை கடற்பகுதியில் இன்று அதிகாலை ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் நபர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யபட்டுள்ளார்.

பொதி செய்யபட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா, 184கிலோ 200 கிராம் என கூறப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மன்னார் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரை கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவுடன் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படை வடாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் வங்காலைப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தற்காலத்தில் வடக்கு இலங்கையில் அதிகமான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்