சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பொருட்களுடன் 6 பேர் கைது!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பொருட்களுடன் ஆறு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொருட்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுகள், மதுபானங்கள் மற்றும் ஒரு தொகை வாசனைத் திரவியங்கள் என்பவற்றுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் அவரது மனைவியோடு பிள்ளைகள் இருவருமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்