எல்லை சுவர் விவகாரம்: ஜனநாயக கட்சியுடனான கூட்டத்திலிருந்து ட்ரம்ப் அதிரடி வெளியேற்றம்

அமெரிக்க- மெக்சிகோ எல்லை சுவர் அமைப்பதற்கான நிதி வழங்கல் குறித்த ஜனநாயக கட்சி தலைவர்களுடனான சந்திப்பிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக வெளியேறியுள்ளார்.

இதேவேளை, வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கூட்டம் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

எல்லையில் சுவர் அமைப்பது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை ஜனாதிபதி ட்ரம்புக்கு சாதகமாக அமையாததால் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அதன்படி, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு நிதி ஒதுக்கப்படுவது குறித்து 19ஆவது நாளாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானமுமின்றி நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்த தெற்கு எல்லை சுவர் அமைப்பதற்கு நிதியளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் நிதானம் இழந்து மிகவும் மூர்க்கத்தனமான முறையில் வெளியேறியதாக ஜனநாயக கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்