மஹிந்த பதவி விலகியதால் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடு…

சர்வதேச நாணய நிதியம் மீண்டும் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளமையை சீனா வரவேற்றுள்ளது.

சீனாவின் இலங்கைக்கான தூதுவர் செங் சூயெனை, நேற்று அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்த போதே இந்த வரவேற்பு வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச, திடீர் பிரதமரானதன் பின்னர் இலங்கைக்கு வழங்க வேண்டிய கடன்தொகையை சர்வதேச நாணய நிதியம் நிறுத்திவைத்திருந்தது.

எனினும் அவர் நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி விலகியதை அடுத்து சர்வதேச நாணய நிதியம் மீண்டும் இலங்கைக்கு கடனை விடுவிக்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா மேற்கொண்டு வரும் ஒத்துழைப்புக்களுக்காக அமைச்சர் மங்கள சமரவீர நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்