ஐ போன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற இளைஞர்: பரிதாபமாக மாறிய வாழ்க்கை

சீனாவில் ஐ போன் வாங்குவதற்காக கருப்பு சந்தையில் கிட்னியை விற்ற இளைஞரின் வாழ்க்கை தற்போது பரிதாபகரமானதாக மாறியுள்ளது.

தற்போது வாங் என அனைவராலும் அறியப்படும் 25 வயதான மனிதன், 2011-ம் ஆண்டு தனது 17 வயதில் 22,000 யுவான் (£ 2,528) பணத்திற்கு ஆசைப்பட்டு கறுப்பு சந்தையில் தன்னுடைய கிட்னியை விற்பனை செய்துள்ளார்.

ஐபோன் மற்றும் ஐபாட் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், தன்னாலும் அதனை வாங்க முடியும் என்பதை தனது சக தோழர்களுக்கு நிரூபிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவருடைய பணத்தை பெற்றோர் பறித்து கொண்டனர்.

இந்த சம்பவமானது சீனா முழுவதும் பலத்த அதிர்வலைகளை கிளப்பியது.

ஆன்லைனில் அறிமுகமான நண்பர்கள் சிலர், உதவுவதாக கூறியுள்ளனர். அதனை நம்பி அவரும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை சரியாக செய்யாத காரணத்தால், அவருடைய மற்றொரு சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டு தற்போது படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

அவருக்கு டயாலிசிஸ் செய்ய பணம் இல்லாமல் அவருடைய பெற்றோர் திணறி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்