யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்: நோர்வே

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வட.மாகாண மீனவர் இணைய தலைவர் ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாண மீன்பிடி இணையத்தின் ஒன்று கூடல் நேற்று (வியாழக்கிழமை) மாலை யாழில். உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  “சட்டவிரோத மீன்பிடி முறைமையான சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், சிலிண்டர் தொழில் என்பன தற்பொழுதும் வடக்கில் இடம்பெறுகின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், பள்ளிமுனை, பள்ளிக்குடா, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சட்டவிரோத மீன் பிடி முறைமையை பயன்படுத்தியே பலர் தொழில் ஈடுபடுகின்றனர்.

எனினும்  அவர்களை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை“ என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்