10 மில்லியன் ரூபாயினை செலுத்துமாறு விமலிற்கு நீதிமன்றம் உத்தரவு!

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் பெயரில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட “நெத்த வெனுவட்ட எத்த” என்ற நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து சட்டத்தின் கீழ் தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அறிவுசார் சொத்து சட்டத்தின் கீழ் “நெத்த வெனுவட்ட எத்த“ புத்தகத்தின் உண்மையான உரிமை விமல் வீரவன்சவுக்கு அல்லாமல் டில்வின் சில்வாவுக்கே கிடைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாயை செலுத்துமாறும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்