ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 7 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, சமகால அரசியல் நிலைவரம் மற்றும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளல் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்