கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்கு பிரதமர் முயற்சி!- புபுது ஜாகொட சாடல்

ஊடகங்களின் சுயாதீனத்தை பேணுவதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களையும், கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்கு பிரதமர் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிஸ கட்சியின் பேச்சாளர் புபுது ஜாகொட குற்றம் சாட்டியுள்ளார்.

பொலனறுவை மாவட்டத்தின் மின்னேரிய நகரில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், எமது வாழ்க்கையை தீர்மானிக்கும் நிலையில் தற்போது ஊடகங்கள் காணப்படுகின்றன. ஆனால், ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இதனை தடுக்க முடியாது. இது குறித்து மக்கள் தெளிவடைவதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

இந்நிலையில், ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவர்களது இந்நடவடிக்கை ஊடகங்களை நியாயமான முறையில் செயற்பட வைப்பதற்கானதல்ல. ஒக்டோபர் 26 சம்பவத்தின் போது பிரதமர் ரணில் மாத்திரம் நியாயமாகவா செயற்பட்டார். எந்தவொரு ஊடகங்களும் சுயாதீனமாக செயற்படவில்லை.

ஊடகங்களின் சுயாதீனத்தை பேணுவதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களையும், கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்கான முயற்சியிலேயே பிரதமர் தற்போது ஈடுபட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்