அர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த

மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இலங்கை, துருக்கி ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கைபோன்று சிங்கப்பூருடனும் மேற்கொண்டு, மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சிக்கும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தூய்மையாக முடியும்“ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்