இலங்கையில் அஜித் ரசிகர்களின் செயல் ! குவியும் பாராட்டுக்கள்…

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கல்யாணி வீதியில் அமை‌ந்து‌ள்ள முதியோர் இல்லதில் விஸ்வாசம் திரை பட வெளியிடை முன்னிட்டு ஊடகவியலாளர் மிருணன் அவர்களின் ஒருங்கமைபில் தல ரசிகர்களின் மிக பெரிய ஆதரவு மற்றும் உதவிகளுடன் முக புத்தக நண்பர்களின் உதவியுடனும் முதியோர்களுக்கு ம‌திய‌ உணவும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் சில பொருட்களும் வழங்கப்பட்டது.

நடிகர்களின் ரசிகர்கள் அவர்களுக்கான பாதைகள் மற்றும் பால் உற்றுதல் போன்ற விடயங்களை காட்டிலும் இப்படியான சமுக விடயங்களில் ஈடுபடுதல் சிறப்பான மற்றும் நல்ல எடுத்து காட்டான விடயம் என்பதை தல ரசிகர்கள் நிருபித்து உள்ளார்கள் என சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்