புதிய அரமைப்புக்கான பொன்னான தருணத்தை நாம் இழந்துவிடக்கூடாது! – சபையில் சுமந்திரன் எம்.பி எடுத்துரைப்பு

அரசமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளிலிருந்து இறுதிவரை பின்வாங்கப் போவதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடிய அரசமைப்பு சபையில் புதிய அரசமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது.

இந்நாட்டின் அரசமைப்பு அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில் எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம்.

இரண்டு பிரதான தரப்புகளும் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான இந்தப் பொன்னான தருணத்தை நாம் இழந்துவிடக் கூடாது.

இதேவேளை, புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்ட அறிக்கை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்