பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன் தெரியுமா?

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதியப் பானை வைக்கப்பட்டு அதற்கு பொட்டு வைத்து, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள்.

பொங்கலின் சிறப்பே கரும்பும், மஞ்சள் கொத்தும் ஆகும். மஞ்சள் கொத்தையும், கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவார்கள். கோலமிட்ட இடத்தில் தலை வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவார்கள்.

புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சூடுப்படுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சூரிய பகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் எடுத்துக்கொள்வார்.

புதியப் பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன் :

வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு உண்டாகும்.
தெற்கு திசையில் பொங்கினால் செலவு அதிகரிக்கும்.
கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
மேற்கு திசையில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்