சபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிக்கு செல்ல முற்றபட்ட இரண்டு பெண்களை இன்று அதிகாலை போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் பம்பையிலிருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர்.

குறித்த இரு பெண்களும் பேஸ்கேம்ப் பகுதியை தாண்டியதும் அவர்களை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள் மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்காரணமாக சபரிமலை கோயில் பகுதியில் தொடர்ந்தும் பதட்டமான சூழல் நிலவிவருகின்றது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் பெண்களை பம்பைக்கு திருப்பி அனுப்பினர். முன்னதாக பொலிஸாரின் அறிவுரையை ஏற்கமறுத்த பெண்கள் 41 நாட்கள் விரதம் இருந்ததாகவும் வழிபடாமல் திரும்பிச்செல்ல மாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவின் படி அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இருப்பினும், பலத்த போராட்டங்களையும் மீறி அண்மையில் கேரளாவைச்சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலர் சபரிமலை ஐயப்பனை தரிசித்தமை குறிப்படத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்