ஜனாதிபதி தேர்தல் – ராஜபக்ஷ குடும்பத்திற்குள் போட்டியா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தானும் தயாராகவிருப்பதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு தான் பொருத்தமானவன் எனின், நானும் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவரே பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரென்றும், அவர் யார் என்பது குறித்து தற்போது கூறமுடியாது என்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் தயாரென்றால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தானும் தயாரென அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாரென தெரிவித்துள்ளமை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்திற்கிடையிலேயே போட்டி நிலவுவதை வெளிக்காட்டுவதாக அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்