அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் தொடர்பில் தீர்மானம்

அமைச்சுக்களின் கீழுள்ள அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கான தலைவர்களை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சுக்களின் கீழ்வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதில் இழுபறி காணப்பட்ட நிலையில், இன்று அதற்கான தீர்வு எட்டப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்