யாழ் மாநகரசபையில் தைப்பொங்கல் திருவிழா

தைப்பொங்கல் விழா யாழ் மாநகரசபையில் பொங்கல் பொங்கி இன்று (2019.01.16) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வானது யாழ் மாநகரசபையின் சமயம் மற்றும் கலை கலாசார குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்டின் தலைமையில் இடம்பெற்றது.
பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஒழுங்கு செய்து மிகவும் சிறப்பாக பொங்கல் பொங்கி முதலில் சூரிய பகவானுக்கு படைத்து, பின்னர் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந் நிகழ்வில் மாநகரசபை உறுப்பினரும், சமயம் மற்றும் கலை கலாசார குழுவின் தலைவருமான  பாலச்சந்திரன் தலைமையுரையினை வழங்கியிருந்தார்.
வாழ்த்துரைகளை  முதல்வர் இம்மானுவல் ஆனல்ட், யாழ் மாநகர சபை உறுப்பினர் செல்வவடிவேல், ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் வழங்கியிருந்தனர். நன்றியுரையினை மாநகரசபை உறுப்பினரும், சமயம் மற்றும் கலை கலாசார குழுவின் உறுப்பினருமான  எம்.எம்.எம். நிபாஹிர் வழங்கியிருந்தார்.
இத் தைப்பொங்கல் விழாவில் மாநகரசபை உறுப்பினர்கள், சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், பகுதித் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்