ஜனநாயக காவலன் சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் பிரமாண்டமானவிழா!

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஜனநாயகத்தின் காவலனே வருக என்று மிகப் பிரமாண்டமாக பதாதைகள் தொங்கவிட்டு, நகரெங்கும் அலங்கரித்து, பாரிய வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

யாழ்.பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் மா.நடராசசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டத்தரணி சந்திரசேகரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வாழ்த்துரைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்புக்கிளை செயலாளர் இ.இரட்ணவடிவேல், ஓய்வுநிலை அதிபர் கலாநிதி எஸ்.சேதுராஜா, ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் யோ.இருதயராஜா, கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன், சிரேஷ்ட சட்டத்தரணி சி.காண்டீபன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா ஆகியோர் வழங்கினர்.

வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..ஏ.சுமந்திரனின் வழங்கினார். இறுதியாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் அ.சா.அரியகுமாரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

அண்மையில் நாட்டில் நடைபெற்ற பெரும் அரசியல் குழப்பத்துக்கு உச்சநீதிமன்றத்தில் கம்பீரத்துடன் வாதாடி ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, தமிழ் மக்களுக்கும் தான் பிறந்த வடமராட்சி மண்ணுக்கும் பெருமைதேடிக் கொடுத்தமைக்காகவே இந்த விழா வடமராட்சி பொது அமைப்புக்களாலும் பொதுமக்களாலும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்