வடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தவர் மஹிந்தவே! – விஜயகலா

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு இந்துக் கல்லூரியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டக்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டக்கல்வி மூலம் மாணவர்களில் எதிர்காலத்தில் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தெளிவான முடிவினை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்