இரட்டைக் குடியுரிமை எனது தனிப்பட்ட விடயம் அமெரிக்கா தடுக்கமுடியாது என்கிறார் கோத்தா!

இரட்டைக் குடியுரிமை தனது தனிப்பட்ட விவகாரம் என்றும், தனிநபரின் உரிமைகளை அமெரிக்கா தடுக்க முடியாது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டிடுவதற்குத் தடையாக உள்ள அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு, அந்த நாடு அனுமதிக்காது என்று கூறப்படும் தகவல்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இரட்டைக் குடியுரிமையை வைத்திருப்பது அல்லது அதனைத் துறப்பது  ஒருவரது தனிப்பட்ட விடயம்

இது எனது தனிப்பட்ட விடயம். அந்த வகையில் இதனை நான் வைத்திருக்கலாம் அல்லது கைவிட்டு விடலாம்.  யாரும் அதனைப் பிரச்சினையாக்க முடியாது. யாரும் கட்டிவைக்க முடியாது.

தாராள ஜனநாயகத்தின் தந்தை என்று அமெரிக்கா பெருமைப்பட்டுக் கொள்ளுகிறது, எனவே, எந்தக் காரணத்துக்காகவும், தனிநபர் உரிமைகளை அவர்களால் தடுக்க முடியுமா? அவர்களால் முடியாது.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயார் என்று ஏற்கனவே கூறிவிட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்