வடக்கு ஆளுனரைச் சந்தித்தார் முன்னாள் முதல்வர் விக்கி

வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுனரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், மத்திய அரசாங்கத்துக்கும், வடக்கு மாகாணசபைக்கும் இடையில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்