நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ! காரைதீவு பிரதான வீதியில் சம்பவம்

இன்று(18) நண்பகல் 12 மணியளவில் சாய்ந்தமருது பகுதியில் இருந்து வருகைதந்த மோட்டார் வண்டியானது வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் கண்ட பாதசாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் மாத்திரம் சிறு காயங்களுக்கு உள்ளாகியதோடு முச்சக்கர வண்டியானது சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது.

குறித்த விபத்து காரைதீவு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்