யாழ் நகரில் பட்டிப்பொங்கல் நிகழ்வு

பசுக்கள் இடபங்களைப் பாதுகாப்பதற்கான சகல சமய நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று முந்தினம் (2019.01.16) மதியம் யாழ் நகரில் அமைந்துள்ள சத்திரம் வைரவர் ஆலயத்தில் நடைபெற்ற பட்டிப் பொங்கல் உற்சவமும் ஆனிரை ஊர்வலமும் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டதுடன், சமய வழிபாடுகளிலும் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்