வவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு

வவுனியா மதகு வைத்தகுளத்தில் அமைந்துள்ள சென் சூ லான் முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு பள்ளியின் தலைமை ஆசிரியை நிருபா சச்சிதானந்தன் தலைமையில் இன்று (18) நடைபெற்றது.

இலங்கை மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி குணரத்தின தேரர் மற்றும் வவுனியா மதகுரு சர்மா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு ஆசிகள் வழங்கியிருந்தனர்.

சென் சூ லான் முன்பள்ளி பொங்கல் நிகழ்வை முன்னிட்டு சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு தொகை உலர் உணவுப்பொதிகள் மற்றும் இனிப்பு வகைகள் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

>பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்கள் இருவருக்கு மடி கணணிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்