பொறுப்புக்கூறல் கடப்பாடு இலங்கையில் வலுவிழப்பு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறை என்பன குறித்த கடப்பாட்டை அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையானது வலுவிழக்கச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் இந்த வருடத்துக்கான உலகலாவிய அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நீதி வழங்கல் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடப்பாடு அரசியல் நெருக்கடியால் வலுவிழந்துள்ள நிலையில் நீண்டகாலமாக துன்பங்களை அனுபவித்துவரும் மக்கள் தொடர்பான தமது கடப்பாடுகளை விரைந்து நிறைவேற்றுவது தொடர்பில் இலங்கையின் நட்புறவு நாடுகள் மற்றும் அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும்” – என்றுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்