ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி ; இந்திய அணி அசத்தல் வெற்றி!

ஆஸ்திரேலியா, மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றது. இதன் மூலம் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.அது வரலாற்று சாதனையுமாகும். தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது வந்தது.

அதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2 வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், இன்று மெல்போர்னில் கடைசி மற்றும் 3 வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு விளையாடி இந்திய அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி சார்பில் தோனி 87 ரன்களும், கேதர் ஜாதவ் 61 ரன்களும் ரன்களும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்