விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின் உரிமைக்காக போராடுகின்ற ஒரே ஒரு கட்சியாகும் – கோடீஸ்வரன் எம்.பி

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின் உரிமைக்காக உலக நாடுகள் வரை சென்று போராடுகின்ற ஒரே ஒரு கட்சியாகும்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான மக்களின் கருத்துக்களை கேட்டறிகின்ற கூட்டம் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலமையில் நேற்று (18) இடம்பெற்றது.இன் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பா.உ கோடீஸ்வரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார் . தொடர்ந்தும் உரையாற்றிய அவர்-;

கல்வி துறை இந்த பகுதியில் வளர்ச்சி அடைய செய்யவேண்டும் கல்விதுறை வளர்ச்சி அடையுமாயின் ஏனைய சமூக மற்றும் கலாச்சார விடயங்களும் வளர்ச்சி அடையும் எனவே இங்குள்ள பெற்றோர்கள் உங்களது பிள்ளைகளின் கல்வி அறிவை வளப்படுத்த முன்நிற்கவேண்டும் .

இந்த ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கூடுதலான வீடுகள் புனர்அமைக்கப்படாமல் இருப்பதாகவும் அரைகுறையாக வீடுகள் உடைந்த நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற ஒரு அவல நிலை இந்த பகுதியில் கூடுதலாக இருப்பதாகவும் அந்தவகையில் இந்த ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள 500குடும்பங்களுக்கு முதல்கட்டமாக நாற்பது ஆயிரம் ரூபாயில் இருந்து ஒருலட்சம் ரூபாய் வரையான நிதியை ஒதுக்கி தருவதற்கு திட்டமிட்டுள்ளேன்.உண்மையாக பாதிப்புக்கு உள்ளாகிய வீடுகளுக்கு மானிய அடிப்படையில் நிதி வளங்கப்படும்.

இந்த அம்பாறை மாவட்டத்தில் 2500 பேருக்கு இப்படியான நிதி உதவி வளங்குவதற்கு நான் முடிவு எடுத்துள்ளேன் அதற்கான சகல ஒழுங்குகளும் தற்போது மேற்கொள்ள பட்டுள்ளது.

இந்த அம்பாறை மாவட்டத்தில் 52 கிராமங்கள் இருக்கின்றன அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை விடயங்கள் ,அபிவிருத்தி விடயங்கள், காணி விடயம் தொடர்பாக கண்ணோக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளது. இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தான் என்றும் தயாராக இருக்கின்றேன்.

மேலும் இந்த ஆலையடி வேம்பு பிரதேசத்தில் கூடுதலான ஆலயங்கள் புனர்அமைப்பு செய்யப்படாமல் உள்ளது.நான் முன்னரும் இந்த ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளேன்.புனர் அமைப்பு செய்யப்படாமல் உள்ள ஆலயங்களுக்கு ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.அது இந்து ஆலயமாகவோ கிறிஸ்தவ ஆலயமாகவோ இருக்கலாம் அந்த நிதி அவர்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும்.மேலும் இங்குள்ள விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக 20 லட்சம் வரை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இங்குள்ள விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக தான் முன்னரும் அதிக நிதி ஒதுக்கியுள்ளதாகவும் விளையாட்டு கழகங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும் இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் இந்த நாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. மேலும் தமிழர்களை அவர்கள் ஏமாற்றுபார்களானால் அந்த ஆட்சியை கவிழ்பதற்கான சக்தி எமது கட்சிக்கு உள்ளது அதை யாரும்
மறந்து விடக்கூடாது.எமது கட்சி நினைத்தால் ஐக்கிய தேசிய கட்சியையும் ஆட்சி பீடம் ஏற்றும் ஶ்ரீலங்கா சுகந்திர கட்சியையும் ஆட்சி பீடம் ஏற்றும் அந்த சக்தி நீங்கள் வாக்களித்து அனுப்பிய 14 பா. உ உள்ளது. எந்த கட்சியானலும் எமது மக்களை ஏமாற்ற நினைத்தாலும் சரி அந்த கட்சி ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்படும் அது ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி.

கடந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மகிந்த ராஜபக்ச அவர்களை எதிர்த்து சிறு பான்மை இனத்தவர்களின் அதிகளவான வாக்குகளை பெற்று தமிழர்களுக்கு உரிய தீர்வு வழங்குவதாக கூறி வெற்றி பெற்றவர் ஜனாதிபதி மைத்திரிபால அவர் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் இன்று புதிய அரசியல் அமைப்பு வரைபினை எதிர்த்து நிற்பது மன வேதனை அளிக்கின்றது. இன்று இந்த நாட்டின் ஆட்சி கவிழ்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போராடி இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்த பெருமை எமது கட்சிக்கு உள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. அந்த கட்சியின் பலத்தை நிலைநிறுத்த வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது.

அரசியல் தீர்வு திட்ட விடயமாக ஐ.நா சபை மட்டுமல்லாது உலக நாடுகள் வரை சென்று தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற, தமிழர்களுக்கு தீர்வு திட்டம் வர வேண்டும் என போராடுகின்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே உள்ளது என கெளரவ பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் சமய பெரியார்கள் வர்த்தக சங்க தலைவர்கள் , பொது அமைப்புக்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்