வவுனியாவில் குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான் எம்.பி

>வவுனியா நிருபர்
> > வவுனியாவில் குடிநீர் பிரச்சினையை எதிர் கொள்ளும் கிராமங்களுக்கான குழாய் கிணறுகளை முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற காதர் மஸ்தான் அவர்கள் வழங்கி வைத்தார்.
> >
> > வவுனியா மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கும் ஆசிகுளம், அம்மலாங்கொடவ, ஹெட்டகம, கணேசபுரம், மணிபுரம், பாவற்குளம், மெனிக்பாம், புதுக்குளம் ஆகிய கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஓவ்வொரு கிராமத்திற்கும் ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சோழர் பவர் நீர்த்தாங்கியுடன் கூடிய குழாய் கிணறுகள் அமைத்து மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது.
> >
> > முன்னாள் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அவர்களினால் ஐஎஸ்ஆர்சி அமைப்பின் நிதி உதவியில் இக் குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
> >
> > இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஐஎஸ்ஆர்சி நிறுவன பணிப்பாளர் மிகிலான், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்