அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார ஆதாரம் இருப்பதாக கூறிய மொடல் அழகி கைது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தின் போது ரஷ்யாவின் தலையீடு தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய மொடல் அழகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் கசிந்த சில ரகசிய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்த பெலாரஸை சேர்ந்த மொடல் அழகி தற்போது ரஷ்ய காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாஸ்டியா யர்ப்கா என்ற சமூகவலைத்தள அடையாளத்தைக் கொண்ட அனஸ்டாஸியா வாஷூகெவிச் (27) என்னும் குறித்த மொடல் அழகி முன்னதாக தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார்.

பின்னர் ரஷ்ய தலைநகர் மொஸ்கோ விமான நிலையத்திற்கு சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாஸ்டியா கைதுசெய்யப்படுவது போன்ற காணொளியை அவரது வழக்கறிஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாஸ்டியாவை போன்றிருக்கும் பெண்ணொருவரை நான்கு ஆண்கள் வலுக்கட்டாயமாக சக்கர நாற்காலி ஒன்றில் வைத்து தள்ளிச்செல்வதையும், பின்னர் சுமந்து செல்வதையும் அந்த காணொளி சித்தரிக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்