ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு – மத்திய அரசிடம் விளக்கம் கோரல்!

ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமென  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சட்டத்தரணி முத்துக்குமார், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கோயில் திருவிழாக்களில் தேர் இழுக்கும்போது எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பொது காப்பீடு செய்யப்படுகின்றது. இதுபோல ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு, வடமஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் போன்ற விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்கள், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு சாரா பொது காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களை விசாரனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகளான கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில்நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பொது காப்பீடு எப்படி சாத்தியமாகும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்