இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி!

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின், சிகிச்சைக்கு போதிய பணமில்லாமல் தவித்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலம், பரோடாவை சேர்ந்தவர் ஜேக்கப் மார்ட்டின். இவர் கடந்த 1999 – 2001 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். வெஸ்ட் விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், இந்தியாவுக்காக மொத்தம் மொத்தம் 10 ஒரு நாள் போட்டிகளில் (158 ரன்கள்) விளையாடியுள்ளார்

சிறந்த முதல் தர கிரிக்கெட் வீரரான இவர், 138 போட்டிகளில் 9,192 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2016-17ல் பரோடா அணிக்கு மார்ட்டின் பயிற்சியாளராக பணியாற்றினார்.இவர், கடந்த மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ.70,000 செலவு செய்யப்படுகிறது.

இதுவரை இவருக்கான மருத்துவசெலவு ரூ. 11 லட்சத்தை தாண்டிவிட்டது. இதனால், மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் அவரின் மனைவி தவித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ) சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்