கொழும்புக்கு இன்று கொண்டுவரப்படவுள்ளன மனித எச்சங்களின் மாதிரிகள்

அமெரிக்காவிற்கு அனுப்பிவைப்பதற்காக, மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள், பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளன.

அதற்கமைய குறித்த மாதிரிகள் இன்று (புதன்கிழமை) முற்பகல் மன்னார் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன.

அதன்பின்னர் குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புலோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளன.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்