விடுதலைப்புலிகளுக்கு எதிரான முக்கிய ஆவணங்கள் பிரித்தானியாவில் அழிக்கப்பட்டன: சிங்கள ஊடகம்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான முக்கிய ஆவணங்களை பிரித்தானியா அரசாங்கம் அழித்துள்ளதாக இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான 372 ஆவணங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் வெளியாகும் மோர்னிங் ஸ்டார் என்னும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டதாக குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த செயற்பாட்டுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும்  சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கைப் போருடன் தொடர்புடைய சுமார் 200 ஆவணங்களை பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகம் அழித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான ‘த கார்டியன்’  ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்