விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு பின்னர் சுமந்திரன்

தமிழர்களின் அடுத்த கட்ட போராட்டத்தை இப்போது சுமந்திரன் எம்.பி முன்னெடுத்து வருவதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியில் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் பிரிவினைப் போராட்டத்தை முதலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகம் ஆரம்பித்தார்.

பின்னர் இரண்டாம் கட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தினார். அடுத்த கட்டத்தை இப்போது சுமந்திரன் முன்னெடுக்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்