மைத்திரியின் நெற்றியில் சுட்டுக் கொல்லமுயன்ற பொலிஸ்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நெற்றிப்பொட்டில் சிறிலங்காப் பொலிஸார் துபாக்கியை வைத்து சுட முயன்றதாக பரபரப்பு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வொன்றின்போதே மைத்திரி மேற்கண்ட கருத்தை பல வருடங்கள் கழித்து வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மைத்திரி, கடந்த 1971ஆம் ஆண்டு தன்னை சேகுவேரா இயக்க உறுப்பினர் எனக் கூறி சிறிலங்கா பொலிஸ் கைதுசெய்ததாகவும் அதன்பின்னர் சுட்டுக் கொல்ல முயன்றதாகவும் ஆனாலும் தான் வணங்கும் காவல் தெய்வங்களால் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினார்.

கைதுசெய்த பொலிஸார் தனது நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்து இடம் ஒன்றினை வரைந்து அதில் இராணுவ முகாம் என எழுதுமாறு கூறியதாகவும் அதனைச் சாட்டாக வைத்து தான் இராணுவ முகாம் ஒன்றைத் தகர்க்க முயன்றதாகக் கூறி மேலதிகாரியிடம் மாட்டிவிடப்பார்த்ததாகவும் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த கருத்து இலங்கை மற்றும் வெளி நாட்டு ஊடகங்களில் பரபரப்போடு பேசப்பட்டுவருகின்றது.

அண்மைக் காலமாக ஜனாதிபதி மைத்திரி இவ்வாறான சர்ச்சைகளுக்குரிய கருத்துக்களை கூறிவருவது பலரது கவனத்தையும் திசைதிருப்பியிருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்