ஆயிரம் ரூபா கோரி அதிர்ந்தது தலைநகர்!

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி கொழும்பில் நேற்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

ஐந்துலாம்பு சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதில் பல அமைப்புகள் கலந்துகொண்டு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி விண்ணதிரக் கோஷங்களை எழுப்பினர்.

தோட்டத் தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்