சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான கார் – அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தாயும் மகனும்

கனடாவில் சரக்கு ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தாயும் மகனும் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

கனடாவின் Amanda Collins பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த காரில் பயணித்த தாயும் மகனும் காயங்களின்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக வீதி வழுவழுப்பு தன்மையுடன் காணப்பட்டதாகவும், இதன்காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாகவே இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்